தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் படங்களை தருவதில் வல்லவர் தல அஜித். அவர் படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். அப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித் அடுத்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். ஒரு இயக்குனரின் படத்தில் நடித்து வெற்றி பெற்றுவிட்டால் அவருடன் நல்ல நட்புடனே விளங்குவார் அஜித். அப்படி அந்த இயக்குனர்களுடன் மீண்டும் இணைந்து நல்ல படத்தை தருவார். இயக்குனர் சிவாவுடன் மூன்று படங்கள், தற்போது வினோத்துடன் இரண்டு படங்கள் என நல்ல கதைகளத்தை கொடுத்தால் அஜித் தவறாமல் நடிப்பார்.

அந்த வரிசையில் மீண்டும் இன்னொரு இயக்குனர் அஜித்துடன் இணையப்போவதாக தெரியவந்துள்ளது. 2011ல் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இந்த படம் அஜித்துக்கு முக்கிய படமாக அமைந்தது. சுவாரசியமான கதைக்களம், பல திருப்புமுனைகள் கொண்ட இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கினார். மங்காத்தா படம் வெற்றி பெற்றதும் ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். தற்போது ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு அவர்கள் வலிமை அப்டேட் வரட்டும் பின்பு மங்காத்தா−2 அப்டேட் தருவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது அஜித் தனக்கு நல்ல நண்பர் எனவும், அவர் தன்னிடம் எளிமையாக பழகக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நடிகர் அஜித் தன்னிடம் மக்களுக்கு உதவும் அல்லது மக்களைக் காப்பாற்றும் ஹீரோ கதைகள் அல்லாமல் ஒரு ஜாலியான கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறினார் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். எது எப்படியோ தல ரசிகர்களுக்கு வலிமை அப்டேட் டீஸர், ட்ரெய்லர் என அவர்கள் உற்சாகம் அடையப்போகிறார்கள். இனி வரும் நாட்கள் எல்லாம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.