அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் 60 படங்களை முடித்து தற்போது 61வது படமான ஏகே 61ல் நடித்து வருகிறார். இந்த படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சமீபத்தில் வெளியாகியிருந்த படம் தான் வலிமை. இந்த படத்தையும் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார். ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. எனவே அடுத்த கதையை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் முனைப்பில் இருந்து வருகிறார் தல அஜித் குமார்.

அதன்படி போனில் கபூர் – எச் வினோத் – அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஏகே61 படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடங்களில் தல அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. படத்தின் படப்பிடிப்புகள் 90% முடிவடைந்த நிலையில், 10% மட்டுமே படம் மீதி இருப்பதாகவும், ஒரு சண்டைக் காட்சி எடுப்பதற்காக அஜித் மற்றும் படக்குழு தாய்லாந்து செல்ல இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. படத்தில் இருந்து சிறிது ஓய்வெடுத்த அஜித் தற்போது லடாக் மட்டும் காஷ்மீர் பகுதிகளில் பைக் சாகசம் செய்து வருகிறார் .அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடித்து வரும் வாரிசு படமும், ஏகே 61 படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் வெகு நாளாக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்திற்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இருக்கிறது.