Categories: சினிமா

கடைசியாக நாயகியை முடிவு செய்த ஏ.கே. 61 படக்குழு….அசத்தல் காம்போவில் தயாராகும் படம்

வெளியிட்டது

வலிமை படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்ட செட் போட்டு படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பல வருடங்களுக்குப் பிறகு அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கடைசியாக நாயகியை முடிவு செய்த ஏ.கே. 61 படக்குழு....அசத்தல் காம்போவில் தயாராகும் படம் 1

மேலும் இந்த படம் மணி ஹெய்ஸ்ட் என்ற வெப்சீரிஸ் போல வங்கி திருட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது எனக் கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வினோத் அஜித்தை வைத்து 2 வெற்றி படங்கள் கொடுத்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இப்போதே கூடியுள்ளது.

படத்தில் வெளியன் ஒரு சுவாரசிய தகவல் என்னவென்றால் ஏகே 61 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கயுள்ளார் என்பதே. அதில் ஒரு அஜித் வயதான அப்பா கதாபாத்திரத்திலும், அவருக்கு மகனாக மற்றொரு கதாபாத்திரத்திலும் அஜித் நடிக்கிறார் என்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அதிலும் இளவயது அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தபு நடிக்கிறார் என்றும் வதந்திகள்  பரவியிருந்தது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நம்பகதகுந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித் ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்க உள்ளாராம் . ஏற்கனவே அஜித், தாடியுடன் கடுக்கன் போட்டிருந்த போட்டோ வெளியாகியிருந்தது. இந்த கெட்டப்புடன் தான் அஜித் ஏகே 61 படத்தில் இருப்பார். அவருக்கு ஜோடியாக படத்தில் ராகுலும் இல்லை தபுவும் இல்லை மலையாள நடிகை மஞ்சு வாரியார்  தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

43 வயதான மஞ்சு வாரியர் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தான் நடிப்பதாக கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவருடைய காம்பினேஷன் இந்த படத்தில் எப்படி இருக்க போகிறது எனபதை காண ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக உள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்