“அஜித்தின் ஆட்டோகிராப்…நெகிழ்ந்த ரசிகர்…ரசிகரை குஷிப்படுத்திய அஜித்”

வெளியிட்டது

"அஜித்தின் ஆட்டோகிராப்...நெகிழ்ந்த ரசிகர்...ரசிகரை குஷிப்படுத்திய அஜித்" 1

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித். எந்த வித பின் புலமையும் இன்றி இப்பொது  சினிமாவின் ஆகா சிறந்த நாயகனாக தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய “வலிமை” திரைப்படம் இந்த ஆண்டின் ஒரு தமிழ் படங்களின் மிக பெரிய ஒப்பனிங் பெற்ற படம் மட்டுமின்றி இப்போதைக்கு 2ஆவது அதிக வசூல் செய்த படமாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொது மீண்டும் ஹெச். வினோத், போனி கபூர், தல அஜித் இணையும் 3வது படம் ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு முன்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளியான “நேர்கொண்ட பார்வை, வலிமை” என இரண்டு படங்களுமே மிக பெரிய வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதிலும் நீண்ட ஆண்டுகள் கழித்து நெகட்டிவ் ரோலில் தல நடிப்பதாக செய்திகள் வெளியானதால் இன்னும் ரசிகர்கள் ஆர்வமாக படத்தை எதிர்பார்த்து உள்ளனர். படத்திலிருந்து சில அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இன்னும் கூடுதல் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.

இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார். அதே போல சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.

அஜித் ஸ்டைலிஷ் நெகட்டிவ் ரோலில் நடித்த பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதிலும் அஜித் இந்த படத்தில் 2 வேடங்களில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நடிக்க இருப்பதாலும் படம் படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்பொது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் துவங்கவுள்ளது. இந்த இடைவேளையை பயன்படுத்திக் கொண்டு நடிகர் அஜித், நீண்ட நாட்களாக தன்னுடைய ஆசையான ஐரோப் பைக் டூர் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தினமும் வெளியாகி வருவது மட்டுமின்றி இணையதளத்தில் மிகவும் வைரலானது.

அவ்வப்போது இந்த சுற்றுலாவில் இருந்து புகைப்படங்களும், விடியோக்களும் வெளிவரும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாரீஸிலுள்ள “ஈபிள் டவர்” சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு தன்னை சந்தித்த ரசிகர்களுடன் பேசி மற்றும் அங்குவந்த ஒரு ரசிகரின் டீ-ஷர்ட்டில் சைன் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்பொது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…..

Video Courtesy – pakka entertainment

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்