பாலிவுட் இளம் நடிகர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பிர் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகனாக திரைத்துறையில் அறிமுகமாகி தனக்கென தனியாக ஒரு இடத்தை சினிமா உலகில் உருவாக்கி வைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு வெளியான “சவாரியா” என்ற படம் மூலம் அறிமுகமான இவர், அந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும், பின்னர் அதில் நடித்ததற்கு பிலிம் பேர் விருதினை வென்று அசத்தினார்.

அதன் பின்னர் “Wake up sid” “ஆஜ் பிரேம் கி கசப் கஹானி”, ராஜ்நீதி, பர்ஃபி, ஏ தில் ஹை முஷ்கில், ராக்ஸ்டார், சஞ்சு போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இது வரையில் மொத்தம் 6 பிலிம் பேர் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். நடிப்பு மட்டுமின்றி இவருடைய நிஜ வாழ்க்கை காதல் விவகாரங்களும் பாலிவுட்டில் மிக பிரபலம். நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் போன்ற நடிகைகளுடன் இவர் காதல் வயப்பட்டு அந்த செய்திகள் பாலிவுட்டில் மிக பரபரப்பாக பேசப்பட்டது.
அதே போல மற்றொரு பிரபலமான பாலிவுட் தம்பதிகள் மகேஷ் பட் மற்றும் சோனி ரேஸ்டான் மகளாக திரைத்துறையில் அறிமுகமான நடிகை அலியா பட். 2012ஆம் ஆண்டு வெளியான “Student of the year” படம் மூலம் அறிமுகமானார். பின்னர் “highway, 2 ஸ்டேட்ஸ், பத்ரிநாத் கி துல்ஹனியா, டியர் ஜின்தகி, கல்லி பாய் போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகையாக பெயர் பெற்றுள்ளார்.
அண்மையில் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் கதை நாயகியாக நடித்து வெளியான “கங்குபாய் கதியாவாடி” படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. சில ஆண்டுகள் மரணமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி கேட்ட பொது “யார் அவர்” என பதிலளித்தது ரசிகர்களின் மிக பெரிய விமர்சனத்திற்கு உள்ளானார் அலியா பட். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த சர்ச்சைகள் நீங்கி வர நல்ல வெற்றி படத்தை கொடுத்துள்ளார் அலியா. அண்மையில் வெளியான RRR படத்திலும் சிறிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தார் அலியா.
அலியா பட்டும், ரன்பிர் கபூரும் நீண்ட காலமாக காதலித்து இப்பொது கடந்த ஏப்ரல் மிக பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இப்பொது நடிகை அலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி இப்பொது வைரலாகி வருகிறது.