இதுனால தான் கால் உடைஞ்சுது..! தனக்கு நடந்த Accident பற்றி ஆலியாவே சொன்ன தகவல்.!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தனக்கு எவ்வாறு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை போட்டுள்ளார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலமாக நடன கலைஞராக சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆலியா மானசா. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் சஞ்சீவ் கார்த்திகையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஆலியாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆலியா மானசா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுனால தான் கால் உடைஞ்சுது..! தனக்கு நடந்த Accident பற்றி ஆலியாவே சொன்ன தகவல்.! 1

இவர்களுக்கு ஐலா, ஆர்ஷ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஐலா பார்ப்பதற்கு பொம்மை போல மிக அழகாக இருப்பார். அவர் செய்யும் குறும்புகளை வீடியோவாக எடுத்து இவர்கள் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மேலும் youtube பக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் வெளிநாடு செல்லும் பொழுதும் அல்லது எங்கேயாவது வெளியில் செல்லும் போதும் அதை வீடியோவாக எடுத்து பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அள்ளுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில்அவருக்கு திடீரென காலில் பிராக்சர் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் உடைந்த போதிலும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார் ஆலியா. ஆனால் அவர் அறுவை சிகிச்சை செய்யும் கட்டயாத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அறுவை சிகிச்சை செல்வதற்கு முன்பு தனக்கு எவ்வாறு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Sanjiv & alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்