இதுல ஏறலாமா? சறுக்கில் ஏறி சறுக்கி விளையாடும் cute ஐலா | AilaSyed

வெளியிட்டது

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதுல ஏறலாமா? சறுக்கில் ஏறி சறுக்கி விளையாடும் cute ஐலா | AilaSyed 1

அந்த குழந்தைக்கு அயிலா சையத் என்று பெயர் சூட்டினர். இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே கூறலாம்.இதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாசிட்டிவாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா அவ்வப்போது தங்களது குழந்தையின் வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் சில குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவை அனைத்துமே நாள் முழுக்க பார்த்து ரசிக்கும் அளவிற்கு கொள்ளை அழகோடு அமைந்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Credits: Behindwoods

தற்போது சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா மற்றும் குட்டி பாப்பா ஐலா ஆகியோர் கோவா சென்றுள்ளனர். தினமும் கோவாவில் Vlog எடுத்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஐலா பாப்பா சறுக்கு ஏறி விளையாடிக்கொண்டு உள்ளது. அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்