சஞ்சீவுக்காக ஆலியா கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்.! தார் ஜீப்பை பரிசாக கொடுத்த ஆலியா.!

வெளியிட்டது

ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ் கார்த்திக் தற்போது தனது மனைவி தனது பிறந்தநாளுக்கு வழங்கிய மகேந்திரா தார் ரக ஜீப்புடன் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவுக்காக ஆலியா கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்.! தார் ஜீப்பை பரிசாக கொடுத்த ஆலியா.! 1

அந்த வீடியோவை பகிர்ந்த சஞ்சீவ் தனது மனைவிக்கு “இது மாதிரியான மிகப்பெரிய கிப்ட் வழங்கியதற்கு தேங்க்யூ பாப்பு” என்று சொல்லி பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் சஞ்சீவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குளிர் 100 டிகிரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவருடன் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா மானசாவையே திருமணம் செய்து கொண்டுள்ளார் சஞ்சீவ்.

சஞ்சீவும் ஆல்யா மானசாவும் தற்போது அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பிறந்தநாள் பார்ட்டி, அவுட்டிங் செல்வது, டூர் செல்வது, குடும்பத்துடன் டின்னர் செல்வது, வெளிநாடு செல்வது என்று எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதை வீடியோவாக எடுத்து தனது youtube பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சஞ்சீவ் தற்போது சன் தொலைக்காட்சியில் கயல் சீரியலில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  ஆலியா மானசா அதே தொலைக்காட்சியில் இனியா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சஞ்சீவின் பிறந்தநாள் பார்ட்டி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

நடிகர்கள் பலரையும் அழைத்து இந்த பிறந்தநாள் பார்ட்டியை சஞ்சீவ் கொண்டாடியிருந்தார். பின்னர் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அவர் தனது மனைவி தனக்கு உயர்ரக மகேந்திரா தார் ஜீப்பை பரிசாக வழங்கியதாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் அந்த காரை வாங்கும் பொழுது குடும்பத்துடன் சென்று கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் வாங்கி இருக்கிறார்.

அந்த வீடியோவை பகிர்ந்து தனது மனைவி ஆலியா மனசாவிற்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.  தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்