ஆலியா நடிக்கும் இனியா சீரியலின் புதிய ப்ரோமோ வெளியானது.! மீண்டும் சந்தியா சிவகாமி காம்போ.!

வெளியிட்டது

ஆலியா மானசா நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 வில் நடிக்கும் நடிகையும் ஆலியா மானசவுடன் இணைந்திருக்கிறார். மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியின் மூலமாக நடன துறையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஆலியா மானசா. இதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வீட்டு வேலைக்காரியாக செம்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இந்த சீரியலின் கதாநாயகனான சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஆலியா. ஆலியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆலியா நடிக்கும் இனியா சீரியலின் புதிய ப்ரோமோ வெளியானது.! மீண்டும் சந்தியா சிவகாமி காம்போ.! 1
குறிப்பாக ஆலியாவின் பிள்ளைகளான ஐலா மற்றும் அர்ஷ் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த குழந்தைகளின் சேட்டைகளை அடிக்கடி வீடியோவாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஆலியா. மேலும் நடனமாடுவது, கணவருடன் இணைந்து விளாக் வீடியோக்கள் செய்வது என்று எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆலியா தற்போது நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இனியா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரசவத்திற்காக ராஜா ராணி சீசன் 2 வில் இருந்து விலகி இருந்தார் ஆலியா. பிறகு உடல் எடை கூடியதால் அவரால் எந்த சீரியலிலும் கமிட்டாக முடியவில்லை.

தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள ஆலியா மானஸா மீண்டும் புதிய சீரியல் கமிட் ஆகியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் சரிகம லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் இனியா என்கிற சீரியலில் அவர் நடித்து வருகிறார் அதற்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ராஜா ராணி சீசன் 2வில் மாமியாராக நடித்து வரும் பிரவீனாவும் இந்த நாடகத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் புரோமோவை பார்த்த பின்பு மீண்டும் சந்தியா சிவகாமி காம்பினேஷனா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்