ஆலியாவுக்கு காலில் ஆபரேஷன்.! ரொம்ப பயமா இருக்கு.! உருக்கமாக பதிவிட்ட ஆலியா மானசா..!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவுக்கு காலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அதற்காக மக்களிடம் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறு ஆலியா மானசா உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலமாக நடன கலைஞராக சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆலியா மானசா. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் சஞ்சீவ் கார்த்திகையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஆலியாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆலியா மானசா.

ஆலியாவுக்கு காலில் ஆபரேஷன்.! ரொம்ப பயமா இருக்கு.! உருக்கமாக பதிவிட்ட ஆலியா மானசா..! 1

இவர்களுக்கு ஐலா, ஆர்ஷ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஐலா பார்ப்பதற்கு பொம்மை போல மிக அழகாக இருப்பார். அவர் செய்யும் குறும்புகளை வீடியோவாக எடுத்து இவர்கள் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மேலும் youtube பக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் வெளிநாடு செல்லும் பொழுதும் அல்லது எங்கேயாவது வெளியில் செல்லும் போதும் அதை வீடியோவாக எடுத்து பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அள்ளுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில்அவருக்கு திடீரென காலில் பிராக்சர் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் உடைந்த போதிலும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார் ஆலியா. ஆனால் அவர் அறுவை சிகிச்சை செய்யும் கட்டயாத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


இதனால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார் ய. இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், உருக்கமாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பயமாக இருக்கிறது, ஆனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஏனென்றால் சஞ்சீவிற்கு மனைவியாக அமைந்த காரணத்தினால் இவ்வாறு உணர்கிறேன். அவர் என்னை பார்த்துக் கொள்ள ஒருபோதும் தவறியதில்லை. என்னுடைய நல்ல சமயங்களிலும் கெட்ட சமயங்களிலும் ஆதரவாக இருந்திருக்கிறார். என்னை அவர் ஒருபோதும் சுமையாக கருதியது இல்லை. என்னுடைய வாழ்க்கை என்றும் அழகாக இருந்திருக்கிறது, அதற்கெல்லாம் அவர் தான் காரணம். ஒவ்வொரு நிமிடமும் என்னை கவனித்துக் கொள்கிறார். எனக்கு கடவுள் கொடுத்த வரம் தான் சஞ்சீவ் என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். அவர் விரைந்து குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்