அப்படியே ஆலியா போல ரீல்ஸ் செய்து காட்டிய ஐலா.! இந்த பொண்ணு இப்பவே இப்படி நடிக்கிறாங்களே.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற தொடரின் மூலமாக அறிமுகமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது தனது மகளுடன் இணைந்து ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் .அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தன்னை போலவே தன் மகளுக்கும் ரீல்ஸ் செய்ய சொல்லி கொடுத்து அந்த அழகிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ஆலியா. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்கிற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் ஆலியா. அதன் பின்னர் இவருக்கு சின்ன திரையில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி பாகம் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலை விட்டு திடீரென ஒரு நாள் விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படியே ஆலியா போல ரீல்ஸ் செய்து காட்டிய ஐலா.! இந்த பொண்ணு இப்பவே இப்படி நடிக்கிறாங்களே.! 1
தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆலியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவர் தன்னுடன் நடித்த சஞ்சீவையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சஞ்சீவ் ஆலியா திருமணத்திற்கு ஆலியா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஐலா என்கிற பெண் குழந்தையும் அர்ஷ் என்கிற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த குட்டிகள் இருவரும் செய்யும் சேட்டைகளை அவ்வப்போது வீடியோக்களாக வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் ஆல்யா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். இந்த குட்டிகள் இருவர் செய்யும் சேட்டைகளை பார்ப்பதற்காகவே பலரும் ஆலியாவின் வீடியோக்களை பார்த்து வருகின்றனர் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை தாண்டி விடுகிறது. இந்த நிலையில் இன்று அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.


அதில் instagram-க்கு ரீல்ஸ் செய்ய சொல்லி ஆலியா ஐலா குட்டிக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஐலாவும் அதை அப்படியே கேட்டு ஆலியா போல் நடித்துக் காட்டுகிறார். இரண்டு மூன்று முறை தவறாக செய்த போதிலும் நான்காவது முறை சரியாக செய்து இருக்கிறார். மிக க்யூட்டாக இருக்கும் அந்த வீடியோவை தற்போது ஆலியா தனது youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்