ஆலியாவுடன் நீச்சல் குளத்தில் செம்ம ஆட்டம் போட்ட ஐலா மற்றும் அர்ஷ் குட்டி.! செம்ம fun வீடியோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் சின்ன திரையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது, ராஜா ராணி பாகம் இரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறக்கும் தருவாயில் அந்த தொடரை விட்டு விலகி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியாவுடன் நீச்சல் குளத்தில் செம்ம ஆட்டம் போட்ட ஐலா மற்றும் அர்ஷ் குட்டி.! செம்ம fun வீடியோ.! 1

குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அவர் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர் சீரியலில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவியில் ஒரு சீரியலில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருப்பதால், கணவருடன் மற்றொரு சீரியலில் அவர் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் குழந்தை பிறந்ததால் உடல் எடை ஏறி காணப்பட்டதால், அவர் நடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடல் எடையை குறைத்து விட்டு சீரியலில் நடிப்பேன் என்று சபதம் எடுத்து இருந்தார்.

கடுமையாக பயிற்சி செய்து இரண்டு மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து விட்டார் ஆலியா. தற்போது அவர் மீண்டும் நாடகங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வெகு நாட்களுக்கு பிறகு இன்று முதல் நாள் சூட்டிங்க்கு ஆலியா கிளம்பி இருக்கிறார். இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். அங்கு ஆலியாவுடன் சேர்ந்து அவரது மகள் அர்ஷ் மற்றும் ஐலா ஆகியோர் நீச்சல் குளத்தில் விளையாடுகின்றனர். அந்த அழகிய வீடியோவை சஞ்சீவ் youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below Video..! 

Youtube Video Code Embed Credits: Sajeev and Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்