ஆலியா மகனின் முதல் பிறந்த நாள்.! முடி வெட்டி செம்ம Cute ஆக ரெடி ஆன அர்ஷ் மற்றும் ஐலா குட்டிகள்.!

வெளியிட்டது

மகனின் முதல் பிறந்தநாளுக்காக முடி வெட்டி ஹேர் ஸ்டைலை மாற்றி அனைவரும் தயாராகி இருக்கும் வீடியோவை தற்போது ஆலியா பகிர்ந்து இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தவர் ஆலியா. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி என்கிற தொடரின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் கதாநாயகன் சஞ்சீவ் கார்த்திக் உடன் காதலில் விழுந்தார். இந்த காதலுக்கு ஆலியா மானசாவின் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆல்யா. சஞ்சீவும், ஆல்யா மானசாவும் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சஞ்சீவ் குளிர் 100 டிகிரி என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நடித்த அவர், பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். இவரது முதல் சீரியலே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியா மகனின் முதல் பிறந்த நாள்.! முடி வெட்டி செம்ம Cute ஆக ரெடி ஆன அர்ஷ் மற்றும் ஐலா குட்டிகள்.! 1

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்கிற சீரியலில் நடித்தார். அந்த நாடகம் திடீரென முடிவடைந்தது. தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்கிற சீரியலில் எழிலரசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆலியா மானசாவும், அதே தொலைக்காட்சியில் இனியா என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆலியா மானசாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தை பெயர் ஐலா. இரண்டாவது குழந்தை பெயர் அர்ஷ். ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகி இருந்தார். பின்னர் உடல் எடை கூடி காணப்பட்டதால் அவரால் எந்த சீரியலிலும் கமிட்டாக முடியவில்லை. இரண்டு மாத காலம் கடுமையாக உடற்பயிற்சி செய்து 10 கிலோ வரை எடை குறைத்து மீண்டும் சன் டிவி தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி இருக்கிறார்.

ஆலியாவும் சஞ்சீவும் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி, அதையும் நடத்தி வருகின்றனர். அதில் இவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்புகளை வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர்.தற்போது இவரது மகன் அர்ஷ் பிறந்து ஒரு வருடம் நிறைவடைந்து உள்ளது. அந்த பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட இருக்கிறார்கள். அதற்காக அனைவரும் முடி வெட்டி ஹேர் ஸ்டைலை மாற்றி செம்ம Cute ஆக மாறியுள்ளனர். விரைவில் அர்ஷ் பிறந்தநாள் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sanjiv & Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்