Categories: சினிமா

அமலாபால் காதலர் மீது 16 பிரிவுகளில் வழக்கு.. மேலும் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை

வெளியிட்டது

நடிகை அமலாபால் தொடர்ந்த வழக்கில் அவரது காதலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் காதல் மலர்ந்தது. இதனால் 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. 2017 ஆம் ஆண்டு இருவரும் பேசி விவாகரத்து பெற்று விட்டனர். பின்னர் விஜய்க்கு இன்னொரு திருமணம் ஆகி அவர் தனியாக வசித்து வருகிறார். அமலா பால் தன்னுடைய காதலருடன் தனியாக வசித்து வருகிறார். பிரபல பாடகர் பவிந்தர் சிங்கை அமலாபால் காதலித்து வருவதாகவும்,அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமலாபால் காதலர் மீது 16 பிரிவுகளில் வழக்கு.. மேலும் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை 1

அமலா பாலும் பவிந்தர் சிங்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பவிந்தர் சிங் அமலாபாலுடன் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். ஆனால் வெளியான சில நிமிடங்களிலேயே அந்த பதிவை பவிந்தர் சிங் நீக்கியும் இருந்தார். இந்த நிலையில் அமலாபால், தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் தன்னுடைய நண்பர் மட்டுமே என்று விளக்கம் அளித்து இருந்தார். தற்போது திடீரென பவிந்தர் சிங் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை திருமணம் ஆகி விட்டதாக குறிப்பிட்டு வெளியிட்டதால் அதை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாபாலுக்கு பவிந்தர் சிங் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்து இருந்தது. மேலும் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே அமலாபால் தனது சொந்த வீட்டில் தங்கி இருந்தபோது பவிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் புகார் அளித்திருக்கிறார். மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாகவும் மிரட்டி இருக்கிறார் பவிந்தர் சிங். இதனால் கடுப்பான அமலாபால் அவர் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.இதனை அடுத்து பாடகர் பவிந்தர் சிங்கை காவல்துறை கைது செய்துள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video..

Youtube video code embed credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்