Categories: சினிமா

‘வெப் தொடரில் நடிக்க முற்பட்ட’ அமலாபால்!!

வெளியிட்டது
‘வெப் தொடரில் நடிக்க முற்பட்ட' அமலாபால்!! 1

பாலிவுட் நடிகர்-நடிகைகளைப் போல் தென்னிந்திய நடிகர்-நடிகைகளும் ‘வெப்’ தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பட்டியலில் புதிதாக, அமலாபால் இணைந்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில் :-

“கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான-சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களை மற்றும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றேன். புதிய சிந்தனைகளுக்கும், படைப்புகளுக்கும் வரவேற்பும், மதிப்பும் தருகிறார்கள். ‘ஆடை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையே இதற்கு சான்றாக கூறலாம்.

அந்த ஆதரவுதான் மேலும் புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. முன் எப்போதும் இல்லாத விதத்தில், என் சினிமா பயணத்தில், அடுத்து ஒரு புதிய படைப்பில் நடிக்க இருக்கிறேன்.
அந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை இயக்கும் அவரை போன்ற டைரக்டர்கள் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்