Categories: சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் இருந்து உயிரே பாடல் வெளியாகியது…!

வெளியிட்டது

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் உருவெடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்பே இவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து இருக்கிறது எனலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் இருந்து உயிரே பாடல் வெளியாகியது...! 1

அண்மையில் இவருக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் அயலான் படம் மாபெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் தனது அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. அக்டொபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தற்போது இப்படத்தில் இருந்து, உயிரே பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் பாடல் நன்றாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SAREGAMA TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்