“அமர்நாத்தில் மேகவெடிப்பு…..15 பேர் பலி, 40 மேற்பட்டோர் காணவில்லை”

வெளியிட்டது

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு திரளான பக்தர்கள் கடுமையான குளிரிலும் சென்று கொண்டுள்ளனர். இந்த சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 48 பேர் காயமடைந்து உள்ளனர் என காஷ்மீரின் கந்தர்பால் பகுதியை சேர்ந்த தலைமை மருத்துவ அதிகாரி ஏ. ஷா கூறியுள்ளார்.

<"அமர்நாத்தில் மேகவெடிப்பு.....15 பேர் பலி, 40 மேற்பட்டோர் காணவில்லை" 1

கடந்த சில நாட்களாகவே அங்கு வானிலை சரியில்லாத காரணத்தால் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நிலைமை சீரானவுடன் புனித யாத்திரை மேற்கொள்ள அவர்கள் அனுமதிப்பட்டார்கள். கிட்டத்தட்ட 15000 மேற்பட்டோர் இந்த புனித யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது நேற்று மாலை 5 மணி அளவில் ஏற்பட்ட பயங்கர மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் இன்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்து உள்ளனர். 6 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது.

மேகவெடிப்பு ஏற்பட்ட 10 நிமிடங்களுக்குள், 8 பேர் உயிரிழந்து விட்டனர் என தகவல் வந்தது. நீரில் எண்ணற்ற கற்கள் அடித்து வரப்பட்டன. அமர்நாத் புனித பயணத்திற்காக 15 ஆயிரம் பக்தர்களுக்கும் கூடுதலானோர் வந்தனர். நேற்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை மட்டுமே 31 மில்லிமீட்டர் மழை பொழிந்துளளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Video Courtesy – Dinamalar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்