Categories: அரசியல்

அடிப்படையற்ற குடியுரிமை சட்டம்: அமர்த்தியா சென்

குடியுர்மை திருத்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை விதியகளை மீறுவதாகவும், ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றன. பொருளாதார மந்த நிலை, குடியுரிமை திருத்த சட்டம், மாணவர்கள் மீதான குண்டர்கள் தாக்குதல் என இந்தியா போராட்ட களத்தில் இருக்கிறது.

அடிப்படையற்ற குடியுரிமை சட்டம்: அமர்த்தியா சென் 1
அமர்த்தியா சென்

இன்று பெங்களூரில் இன்போசிஸ் அறக்கட்டளையின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ” மதங்களின் அடிப்படையில் மனிதனின் அடிப்படை உரிமைகள் நீக்கப்பட கூடாது என்ற அரசியலமைப்பின் அடிப்படை விதிகளுக்கு மாறாக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளது. இந்த வகையான பாகுபாட்டின் நோக்கத்திற்காக மதங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

மேலும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்துப் பேசிய அமர்த்தியா சென், பல்கலைக்கழகத்தில் முகமூடி குண்டர்கள் நடந்துகொண்ட விதத்தை தான் தகைத்து போனதாகவும் இத் தாக்குதலை நிறுத்த நிர்வாகம் தவறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு நிர்வாகத்திற்கும் காவல்துறைக்குமான தொடர்புகள் வெகு நேரத்துக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெளியாட்கள் உள்ளே வருவதையும் இதுபோன்ற வன்முறைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்