பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். பிக்பாஸில் இருந்த போது அமீர் பாவனியை காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பாவனி தற்போது வரை எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் இருந்து வருகிறார். தற்போது இருவரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வருகின்றனர். பலமுறை அமீர் பாவனியிடம் தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கூறியும், பாவனி அமைதி காத்து வருகிறார். பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற நிகழ்ச்சியின் மூலமாக சீரியலில் அறிமுகமானவர். இவருக்கு புகழைத் தேடித் தந்தது சின்னதம்பி சீரியல் தான். இந்த சீரியலுக்குப் பிறகு பாவனியின் செல்வாக்கு உயர்ந்தது. அதை பயன்படுத்தியே அவர் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 5ல் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருந்தார் பாவனி.

இதே போல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி பிரபலமானவர்தான் அமீர். இவர் பாவனியின் கணவர் திருமணமாகி மூன்று மாதத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தியை கேட்டு, பாவனி மீது காதல் வந்ததாக கூறினார். தற்போது வரை தான் பாவனியை காதலித்து வருவதாகவும், அவர் ஒத்துக் கொண்டால் திருமணம் செய்து கொள்ள விரும்பாதாகவும் கூறி வருகிறார். இந்த நிலையில் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ஆஹா கல்யாணம் போட்டியில் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் இருந்தது. இது இந்த நிகழ்ச்சிக்காக செய்யப்பட்ட ஜோடிக்கப்பட்டது என்றாலும், உண்மையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாவனி தனது instagram பக்கத்தில் நீண்ட போஸ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில், மிஸ்டர் அமீர் நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி போட்டியாளர், உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடன இயக்குநரையும் ஒரு மாஸ்டரையும் பெற்றேன், என் கனவில் கூட நான் நடனமாடுவேன் என்று நினைத்தது இல்லை, பயிற்சிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே கிடைத்தாலும், பயமின்றி நடனமாட முடியும். இதைவிட உங்களால் என்னை வடிவமைக்க முடியாது. உங்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கடுமையான முழங்காலில் காயம் ஏற்பட்டதால், உங்களுக்கு விடுப்பு எடுக்க வாய்ப்பு கிடைத்தது, சக்கர நாற்காலியில் அமர்ந்து நடிப்பதற்கு சேனல் உங்களுக்கு வாய்ப்பளித்தது, ஆனால் நீங்கள் அதை கேட்கவில்லை, எப்போதும் போல், உங்களை நம்பியவர்களுக்காக நடனமாடத் முடிவெடுத்தீர்கள். ஒரு வேலைக்கான அர்ப்பணிப்பு முடிவை எடுத்த பின்னர் எதுவும் நடக்கட்டும், அதை ஒருபோதும் நடுவில் விட்டுவிடாதீர்கள். உங்கள் பணி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக உங்கள் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டு உள்ளது. நண்பர்களே இதை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளீர்கள். நண்பர்களே எங்கள் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி, உங்களுக்காக இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக பாவனி பதிவிட்டுள்ளார்.