Categories: சினிமா

அமீர் பாவனியின் தெறி நடனம்..உறைந்து போன ரம்யாகிருஷ்ணன்..இதுதான் உண்மையான லவ்

வெளியிட்டது

வருடம்தோறும் நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதில் சீசன் ஒன்றிலிருந்து ஐந்து வரை பங்கேற்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முதல் சீசனை முடித்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் டைட்டிலை வென்றனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ரம்யாகிருஷ்ணனும், நடன இயக்குனர் சதீஷும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அமீர் பாவனியின் தெறி நடனம்..உறைந்து போன ரம்யாகிருஷ்ணன்..இதுதான் உண்மையான லவ் 1

இதில் பாவனி சின்னத்திரை சீரியலில் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர். பின்னர் சின்னதம்பி என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். பின்னாளில்அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோக கதைகளை கூறினார். தனது கணவர் ஒரு சிறிய சண்டைக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். இதனால் பாவனி மீது பலருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. பின்னர் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற நடன இயக்குனர் அமீர், உங்கள் கதையை கேட்ட பின்பு உங்கள் மீது எனக்கு காதல் வந்துவிட்டது எனவும், உங்களை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அமீர் மற்றும் பாவனி இருவரும் 3 படத்தில் வரும் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். அதில் பாடலின் நடுநடுவே உடைகளை மாற்றி இருவரும் நடனம் ஆடுவதை பார்த்த ரம்யாகிருஷ்ணன் எழுந்து நின்று கை தட்டுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்