சொந்தமாக புது கார் வாங்கிய பிக்பாஸ் காதலர்கள் அமீர் மற்றும் பாவனி.! வெளியான புகைப்படங்கள்

வெளியிட்டது

பிக்பாஸில் காதல் ஜோடிகளாக வலம் வந்த அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து புது கார் ஒன்றை வாங்கி அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சொந்தமாக புது கார் வாங்கிய பிக்பாஸ் காதலர்கள் அமீர் மற்றும் பாவனி.! வெளியான புகைப்படங்கள் 1
நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடன இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டவர் அமீர். ஊட்டியில் பல குழந்தைகளுக்கு நடன ஆசிரியராக இருந்த அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.


ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவருக்கு பிக்பாஸ் ஒரு திறப்புமுனையாக அமைந்தது. இதில் கலந்து கொண்ட பாவனி ரெட்டியுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. பாவனியும் அமீரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளாத பாவனி, பின்னர் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக பங்கேற்றபின் அமீருடனான காதலை ஒப்புக்கொண்டார்.


இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் குறும்படங்களில் நடிப்பது, ஆல்பம் பாடல்களில் நடிப்பது, படங்களின் நடிப்பது என்று இருவரும் பிஸியாக இருந்து வருகின்றனர்.


அமீர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் இவர்கள் புதிய கார் ஒன்றை வாங்கி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்