Categories: சினிமா

நல்ல முகூர்த்தம் பார்த்து அமீரை திருமணம் செய்து கொள்வேன்..Fans Meetல் போட்டு உடைத்த பாவனி

வெளியிட்டது

சென்னையில் நடந்த பேன்ஸ் மீட்டில் அமீரும் பாவனியும் கலந்து கொண்டனர். அப்போது அமீரை எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு, நல்ல முகூர்த்தம் பார்த்து கொண்டிருப்பதாக பாவனி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். இவர்கள் இருவரும் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதில் சீசன் 1-லிருந்து 5 வரை பங்கேற்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முதல் சீசனை முடித்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் டைட்டிலை வென்றனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ரம்யாகிருஷ்ணனும், நடன இயக்குனர் சதீஷும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நல்ல முகூர்த்தம் பார்த்து அமீரை திருமணம் செய்து கொள்வேன்..Fans Meetல் போட்டு உடைத்த பாவனி 1

இதில் பாவனி சின்னத்திரை சீரியலில் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர், பின்னர் சின்னதம்பி என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். பின்னாளில் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோக கதைகளை கூறினார். தனது கணவர் ஒரு சிறிய சண்டைக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். இதனால் பாவனி மீது பலருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. பின்னர் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற நடன இயக்குனர் அமீர், உங்கள் கதையை கேட்ட பின்பு உங்கள் மீது எனக்கு காதல் வந்துவிட்டது எனவும், உங்களை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வ விரும்புவதாகவும் கூறினார்.

ஆனால் பாவனி அவருக்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்தார். என்ற போதிலும் ஒன்றாக டின்னருக்கு செல்வது, அவுட்டிங் செல்வது என்று இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். இந்த நிலையில் பிக பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அமீர் பாவநீ இருவரும் சென்னையில் இன்று தங்களது ரசிகர்களை சந்தித்தனர். பேன்ஸ் மீட்டில் அமீரும் பாவனியும் கலந்து கொண்ட இருவரிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அனைவரும் அமீரை எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று பாவனியிடம் கேட்டனர், அதற்க்கு நல்ல முகூர்த்தம் பார்த்து கொண்டிருப்பதாக பாவனி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாவனியின் ரசிகர் ஒருவர் பாவனிக்காக தங்க மோதிரம் ஒன்றை வாங்கி அமீர் முன்பே பரிசளித்தார். அதை பார்த்த பாவனி உணர்சிவசப்பட்டார். Watch the below video…

Youtube Video Code Embed Credits: Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்