Categories: சினிமா

அமீர் இயக்கும் முதல் படம்.! கதாநாயகியாக நடிக்கும் பாவனி.! பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.!

வெளியிட்டது

பிக்பாஸ் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கின்றனர். இதில் அமீர் இயக்குனராகவும் பாவனி அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார்கள். அந்த படத்தின் பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பிக்பாஸில் போட்டியாளராக இருந்த பாவனியிடம் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த பாவனி பின்னர் ஒருநாள் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக சின்னத்திரையில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் என்கிற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் டைட்டிலையும் வென்றிருந்தனர். ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்தவர் பாவனி. எனவே அமிரின் காதலை ஏற்பதற்கு அவருக்கு மனதடங்கள் இருந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமீர் இயக்கும் முதல் படம்.! கதாநாயகியாக நடிக்கும் பாவனி.! பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.! 1

பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடவே தெரியாத தன்னை ஆட வைத்து டைட்டிலையும் வாங்கிக் கொடுத்த அமீரின் காதலை ஏற்று இருந்தார் பாவனி. தற்போது இவர்கள் இருவருமே காதல் ஜோடிகளாகவும் வைரல் ஜோடிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டில் தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். மேலும் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, அவுட்டிங் செல்வது, நடனம் ஆடுவது என்று சமூக வலைத்தளங்களில் மிக பிஸியாக இருக்கும் அவர்கள் தற்போது புது படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கின்றனர். ஏற்கனவே இருவரும் இணைந்து துணிவு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் தற்போது புதிய படம் ஒன்றில் அவர்கள் கமிட்டாகி இருக்கின்றனர்.


இந்தப் படத்தை அமீர் இயக்க இருக்கிறார். அந்த படத்தில் பாவனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த படத்தின் பட பூஜையில் நடிகர் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். சபீர் சுல்தா என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் குறித்து பேசிய பாவனி இந்த கதை தனக்காக எழுதப்பட்டதாக தான் உணர்வதாக தெரிவித்தார். அமீர் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், சின்ன சின்ன விஷயங்களுக்காக அவர் அதிகமாக மெனக்கெடுவார் என்றும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: TN360

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்