சின்னத்திரையை கலக்கி வரும் ஜோடிகள் தான் அமீர் பாவனி. இவர்கள் காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று அமீர் பாவனிக்கு லவ் லெட்டர் கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். சின்னதம்பி சீரியலில் நடித்து பிரபலமானவர் பாவனி. ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே விஜய் டிவி சீரியலில் நடித்து இருந்தார். பின்னர் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிக்பாஸ் 5க்கு அழைக்கப்பட்டார். இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டவர் தான் அமீர். நடன இயக்குனநராக இருந்த இவர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி நடத்தி வரும் “பிக்பாஸ் ஜோடிகள்” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று உள்ளனர். பிக்பாஸில் அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி பிக்பாஸில் நாட்களை கடத்தி வந்தார். ஆனால் பாவனி அதை மறுத்தார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என கூறி வந்தார் பாவனி. தற்போது இருவரும் ஜோடியாக பிக்பாஸ் ஜோடிகளில் இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களான வேல்முருகன், ஐக்கி, இசைவாணி, அபிஷேக், ஸ்ருதி, சுஜா போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட வைரலாகி விடும். பிபி ஜோடிகளுக்காக இவர்கள் வெறித்தனமாக practice செய்து வரும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பரவியது. தற்போது அமீர் பாவனியிடம் லவ் லெட்டர் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…
Video Courtesy: Behindwoods Max