பாவனியின் கழுத்தில் தாலி கட்டிய அமீர்.! அமீர் பாவனி நடித்துள்ள ஆல்பம் சாங் வெளியானது.!

வெளியிட்டது

அமீர் பாவனி இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. “செந்தாமரையே” என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாடலின் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது அந்த முழு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார்கள். ரொமான்ஸில் இருவரும் பின்னி எடுத்து இருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 5ல் அமீரும், பாவனியும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அங்கிருந்து பாவனியை மிகத் தீவிரமாக காதலித்து வருகிறார் அமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த இருவரும் முதல் பரிசையும் வென்று இருந்தனர். இதனால் அமீருடனான காதலை உறுதி செய்திருந்தார் பாவனி. பின்னர் இருவரும் இணைந்து சில பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். டைட்டில் வென்றதால் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தும் வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

amir pavani album song

 

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பின்னர் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 5 ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் பாவனி. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர்தான் அமீர். இவர் ஒரு நடன இயக்குனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமானார். பிக்பாஸ் உள்ளே சென்ற நாள் முதலே தான் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து இருக்கும் நிலையில், இருவரும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். மேலும் பல ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் இருவரும் நடித்துள்ள “செந்தாமரையே” என்னும் ஆல்பம் பாடல் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த பாடலை கேளுங்கள்.. Watch the below Video..

YouTube Video Code Embed Credits: Sony Music South.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்