பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக புகழ்பெற்றவர்கள் அமீர் மற்றும் பாவணி. இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் அது எந்த அளவிற்கு கடைசி வரை செல்கிறது என்பதை தெரியவில்லை. அதில் ஒரு ஜோடி மட்டும் விதிவிலக்காக இருக்கிறார்கள். அந்த ஜோடி தான் அமீர் மற்றும் பாவணி. பிக்பாஸில் இருக்கும் போது அமீர் பாவணியை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால் பாவணி அமிரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம் பாவணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி சில நாட்களிலேயே அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதன் பின்னர் பாவணி யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தான் ஒரு ராசி இல்லாதவர் என்றும் தான் விரும்புவர்கள் தன்னை விட்டு விலகிவிடுவார்கள் என்றும் பயப்படுவதாக அமீரின் காதலை ஏற்காமல் தவிர்த்து வந்தார் பாவணி. பின்னர் இருவரும் பிக்பாஸ் ஜோடிகளிலும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தனர். அன்றைய தினமே அமீரின் காதலை ஏற்பதாகவும் நாம் இருவரும் இணைந்து ஒன்றாக வாழ்க்கையை தொடங்கலாம் என்றும் பாவணின் அமீரின் காதலுக்கு சிக்னல் கொடுத்திருந்தார். பிறகு இருவரும் ஆல்பங்களில் நடித்து வந்தனர். தற்போது இருவரும் இணைந்து துணிவு படத்தில் தல அஜித்துடன் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாவனிக்கு ரொமான்டிக்கான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தி இருக்கிறார் அமீர்.
அதில் அவர், என் அன்பே, உங்களுக்கு இன்னும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்கள் ஆச்சரியமாக இருக்கிறீர்கள், நீங்கள் எப்போதும் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் நிரப்புகிறீர்கள்! அதனால் இன்றைக்காவது, உங்களுக்காகவும்அதையே செய்ய விரும்புகிறேன்! எனவே அமர்ந்து ஓய்வெடுங்கள், நாள் முழுவதும் உங்களைப் பற்றிக் கொள்ளட்டும்! என் வாழ்க்கையில் உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, இன்று, உங்கள் சிறப்பு நாளில், நீங்கள் எனக்கு எவ்வளவு அர்த்தம் என்று நான் உங்களுக்குக் காட்ட முடியும் என்று நம்புகிறேன்! உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஒரு அற்புதமான நாள், என் பெண்ணே! என்று பதிவிட்டுள்ளார்.