ஸ்விட்சர்லாந்தில் பனி மழையில் அமீருடன் செம்ம ஆட்டம் போடும் பாவனி.! செம்ம ஜாலியா இருக்காங்களே.!

வெளியிட்டது

ஸ்விட்சர்லாந்தில் பனிமலையில் அமீர் மற்றும் பாவனி இருவரும் சேர்ந்து விளையாடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இருவரும் பனியை பந்து போல செய்து ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடி கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்கிற நாடகத்தின் மூலமாக அறிமுகமானவர் பாவனி. இவர் அதற்கு முன்பாக சில ஹிந்தி படங்களிலும், தெலுங்கு நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ரெட்டைவால் குருவிக்கு பின்னர் சின்னத்தம்பி என்கிற சீரியல் நடித்தார். இந்த சீரியல் மூலமாக அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் பனி மழையில் அமீருடன் செம்ம ஆட்டம் போடும் பாவனி.! செம்ம ஜாலியா இருக்காங்களே.! 1

 

பிக்பாஸ் சீசன் 5ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் பாவனி. அந்த சீசனில் வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் நடன கலைஞராக இருக்கும் அமீர். உள்ளே வந்த உடனேயே தான் பாவனியை விரும்புவதாகவும், பாவனியின் கதையை கேட்ட பின்பு அவர் மீது தமக்கு காதல் ஏற்பட்டதாகவும் கூறி வந்தார். ஆனால் பாவனியோ அமீரின் காதலை அப்போது ஏற்கவில்லை. பின்னர் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அமீர் மற்றும் பாவனி ஜோடிகள் முதல் இடத்தை பிடித்தனர். தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த அமீருக்கு முதல் முறையாக தனது காதலை சொல்லி இருந்தார் பாவனி. விரைவில் திருமணம் செய்து கொள்வோம். இந்த வருடத்திற்குள் எங்களது திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியையும் காதலர் தினம் அன்று பகிர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் காதல் புறாக்களாக வலம் வரும் அவர்கள் அடிக்கடி டூர் சென்று வருகின்றனர். தற்போது இருவரும் ஸ்விட்சர்லாந்து சென்றுள்ளனர். இருவரும் பனியை பந்து போல செய்து ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடி கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்