இன்னும் ஒரு வருடத்திற்குள் தங்களது திருமணம் நடைபெற இருக்கும் செய்தியை அழகிய புகைப்படங்களுடன் அமீர் மற்றும் பாவனி இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர். சின்னத்திரைக்குள் காதல் புறாக்களாக வலம் வருபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன கலைஞர் அமீர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சமீப காலமாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இருவருக்கும் திருமணம் என்று வதந்திகள் பரவி வரும் நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அவர்களே அந்த செய்தியை பகிர்ந்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்கிற நாடகத்தின் மூலமாக அறிமுகமானவர் பாவனி. இவர் அதற்கு முன்பாக சில ஹிந்தி படங்களிலும், தெலுங்கு நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
ரெட்டைவால் குருவிக்கு பின்னர் சின்னத்தம்பி என்கிற சீரியல் நடித்தார். இந்த சீரியல் மூலமாக அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் பாவனி. அந்த சீசனில் வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் நடன கலைஞராக இருக்கும் அமீர். உள்ளே வந்த உடனேயே தான் பாவனியை விரும்புவதாகவும், பாவனியின் கதையை கேட்ட பின்பு அவர் மீது தமக்கு காதல் ஏற்பட்டதாகவும் கூறி வந்தார். ஆனால் பாவனியோ அமீரின் காதலை அப்போது ஏற்கவில்லை.
பின்னர் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அமீர் மற்றும் பாவனி ஜோடிகள் முதல் இடத்தை பிடித்தனர். தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த அமீருக்கு முதல் முறையாக தனது காதலை சொல்லி இருந்தார் பாவனி.
அன்று தொடங்கி இன்று வரை இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் நிகழ்ச்சிகள் என்று படு பிஸியாக இருவரும் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காதலர் தினம் உலகம் எங்கிலும் உள்ள காதலர்களால் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இருவரும் இணைந்து போட்டோ சூட் நடத்தினர். வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு இவர்கள் இருவரும் செய்த ரொமான்ஸ் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இருவரும் திருமணம் குறித்த தகவலையும் பகிர்ந்திருக்கின்றனர்.
விரைவில் திருமணம் செய்து கொள்வோம். இந்த வருடத்திற்குள் எங்களது திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியையும் பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் அமீர் மற்றும் பாவனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் கல்யாணம் தேதியை சொல்லுமாறு அவர்களிடம் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O