பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டிலை தட்டி தூக்கிய அமீர் பாவனி?? தீயாய் பரவும் தகவல்

வெளியிட்டது

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி டைட்டிலை வென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். பிக்பாஸில் இருந்த போது அமீர் பாவனியை காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பாவனி தற்போது வரை எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் இருந்து வருகிறார். தற்போது இருவரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வருகின்றனர். பலமுறை அமீர் பாவனியிடம் தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கூறியும், பாவனி அமைதி காத்து வருகிறார்.

பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டிலை தட்டி தூக்கிய அமீர் பாவனி?? தீயாய் பரவும் தகவல் 1

 

பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற நிகழ்ச்சியின் மூலமாக சீரியலில் அறிமுகமானவர். இவருக்கு புகழைத் தேடித் தந்தது சின்னதம்பி சீரியல் தான். இந்த சீரியலுக்குப் பிறகு பாவனியின் செல்வாக்கு உயர்ந்தது. அதை பயன்படுத்தியே அவர் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 5ல் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருந்தார் பாவனி. இதே போல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி பிரபலமானவர்தான் அமீர். இவர் பாவனியின் கணவர் திருமணமாகி மூன்று மாதத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தியை கேட்டு, பாவனி மீது காதல் வந்ததாக கூறினார். தற்போது வரை தான் பாவனியை காதலித்து வருவதாகவும், அவர் ஒத்துக் கொண்டால் திருமணம் செய்து கொள்ள விரும்பாதாகவும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இருவரும் டைட்டிலை வென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் சீசனில் ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் டைட்டில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்