முண்டா பனியன், ஷார்ட்ஸ் போட்டு வந்து அமீர் கான் மகளை திருமணம் செய்த நபர்.! வைரலாகும் வீடியோ.!

வெளியிட்டது

இந்திய திரை உலகில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் நடிகர் அமீர்கானின் மகளின் திருமணம் தற்போது கோலாகலமாக நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அவரது மாப்பிள்ளை பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கலந்து கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்தி திரையுலகின் ஒரு அடையாளமாக விளங்கிக் கொண்டிருப்பவர் அமீர்கான். இவருக்கு ஹிந்தியில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆரம்பத்தில் சிறுசிறு படங்களில் நடித்து வந்த இவர் பின்னாளில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முண்டா பனியன், ஷார்ட்ஸ் போட்டு வந்து அமீர் கான் மகளை திருமணம் செய்த நபர்.! வைரலாகும் வீடியோ.! 1
இவர் நடிப்பில் வெளியான ‘லகான்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘தங்கல்’ போன்ற திரைப்படங்கள் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடைசியாக இவர் இயக்கிய ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது./பின்னர் அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகள் ஐரா கானுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நுபுர் ஷிகாரே என்கிற உடற்பயிற்சி ட்ரெயினருடன் காதலில் இருந்தார் ஐரா. கடந்த வருடம் இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.

 

இந்த நிலையில் நேற்று மாலை ஐரா கான் மற்றும் நுபுர் ஷிகாரே இருவரின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மாப்பிள்ளை திருமணதன்று கூட ஜாக்கிங் சென்று விட்டு பின்பு அப்படியே பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டார். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இன்னும் பலரும் இதெல்லாம் ஓவராக இல்லையா? என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்