நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களான அமீரும் பாவனியும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பாவனிக்கு ப்ரொபோஸ் செய்து முதல் இந்த பேச்சுக்கள் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

சின்னத்திரை நடிகை பாவனி அமீருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும், பிக் பாஸ் தொடருக்கு பிறகு இருவரும் விஜய் டிவி நிகழிச்சிகளில் சேர்ந்தே பங்கெடுத்து வருகின்றனர். ஒரு ஆல்பம் பாடலிலும் இருவரும் நடித்து இருந்தனர். ஆனால் காதலை அவர் மறுத்து வருகிறார். வீடியோ லிங்க் கீழே.
இப்பொது நடந்து வரும் BB ஜோடிகள் போட்டியில் சேர்ந்தே கலந்து வருகின்றனர். இதனால் இந்த பேச்சு மீண்டும் வலு பெற்று வருகிறது. அந்த நிகழிச்சியின் மத்தியில் இருவரும் அமர்ந்து உரையாடி கொண்டிருக்கும் ஒரு சிறு ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தன்னுடைய போனில் அந்த போட்டிக்கு நடுவில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, தொகுப்பாளினி பிரியங்கா அதனை படம் எடுக்க இருவரும் சிரித்த வண்ணம் பேசுவதை நிறுத்துகிறார்கள். பிரியங்கா இருவரும் உண்மையான காதல் ஜோடியா இல்லை போலியாக நடிக்கிறார்களா? என கூற அதற்கு பாவனி வெட்க பட்டு சிரிக்கும் வண்ணம் அந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Video Courtesy – Vijay Tv youtube