Categories: சினிமா

உடல் நிலை தேறி மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் அமிதாப்!!

வெளியிட்டது
உடல் நிலை தேறி மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் அமிதாப்!! 1

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த வாரம் உடல் நிலை மோசமாகி, மும்பை நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் அமிதாப்பச்சன், உடல் நிலைத் தேறி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்.

மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரைப்படி, அவருக்கு தொடர் ஓய்வு தேவைப்படுவதால், அவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.கடந்த 1982ல் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு விபத்தில் சிக்கினார். அப்போது, அவருக்கு ரத்தம் தேவைப்பட்டு, ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தத்தில் ஹெபாபடிஸ் பி நோய் பாதிப்பு இருந்து, இதனால் அமிதாப்பின் உடலில் நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அமிதாப்பின், கல்லீரல் பாதிக்கப்பட்டது. கல்லீரல் எழுபத்தைந்து சதவீதம் கெட்டுப் போய், செயல் இழந்து விட்டதாக, சமீபத்தில் அமிதாப்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், கடந்த 15ம் தேதி இரவு, அவருடைய உடல் நிலையில் பெரும் பாதிப்புக்குள்ளாகி , அவர், அவசர அவசரமாக நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, உடல் நிலை தேறி, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்