Categories: சினிமா

அம்மன் படத்தில் நடித்த இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா.? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.!

வெளியிட்டது

நாம் அனைவரும் சிறு வயதில் பார்த்த பயந்த திரைப்படம் ஒன்று என்றால் அது ‘அம்மன்’ திரைப்படம் தான். தெலுங்கு மொழியில் உருவான இந்த திரைப்படம் பின்னர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி இருந்தது. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1995ல் வெளிவந்த இந்த படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத திரைப்படம்.

அம்மன் படத்தில் நடித்த இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா.? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.! 1

தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பு ஆனால் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்த காலங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக ‘ஜண்டா’ கதாபாத்திரமும், அவர் திரையில் தோன்றும் போது வரும் பிண்ணனி இசையும் பயத்தை கூட்டும்.

ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்து அசத்தியிருப்பார். அம்மன் என்றாலே ரம்யாகிருஷ்ணன் முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு அம்மனாகவே எல்லா திரைப்படங்களிலும் வாழ்ந்து இருப்பார்.

அதிலும் குறிப்பாக இந்தப் படத்தில் முதல் காட்சியில் குடிசைக்குள் அமர்ந்து இருக்கும் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியும் ரசிகர்கள் பலரையும் புல்லரிக்க வைத்து இருக்கும்.

இதில் அம்மன் சிறுமி வடிவில் தோன்றி கதாநாயகியுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருக்கும். இதில் சிறுமியாக நடித்தவர் நடிகை சுனைனா. இவரை இப்படி சொல்வதை விட ‘அம்மன் தாயி’ என்று சொன்னால் பலருக்கும் தெரியும்.

இவரும் அம்மன் பட வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். சாந்தமான முகத்தை வைத்துக் கொண்டு இவர் நடிப்பில் அசத்தியிருப்பார். அந்த படத்திற்கு பின்னர் இவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரா அது? என்று கேட்கும் அளவுக்கு நிறைய பேருக்கு அவரை தெரியவில்லை.

சமீபத்தில் தல அஜீத் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் வெளிவந்தது. படம் வெற்றிகரமாக ஓடி வசூலையும் வாரி குவிந்திருந்தது. இதில் அஜித் அவர்களுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுனைனா.

ஆனால் பலருக்கும் இவர் அம்மன் படத்தில் சிறுமியாக நடித்த அம்மன் தாயி என்று தெரியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார் சுனைனா. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தற்போது இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்