“நா ரெடி தான்” பாடலுக்கு அச்சு அசல் தளபதி போலவே வெறியாட்டம் போட்ட அமுதவாணன்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் மூலமாக பிரபலமான அமுதவாணன் தற்போது லியோ படத்தில் இருந்து வெளியான “நா ரெடி தான் வரவா” பாடலுக்கு தளபதி போலவே நடனமாடிருக்கும் காணொளியை தற்போது அவரையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பலரும் அமுதவாணின் நடனத்தை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியின் மூலமாக மிமிக்கிரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் அமுதவாணன். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. குறிப்பாக ராமராஜன், விஜயகாந்த் போலவே நடனமாடி பல ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றிருந்தார் அமுதவாணன். பின்பு சில நாட்களாக திரைத் துறையில் இருந்து காணாமல் போயிருந்த அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நா ரெடி தான்" பாடலுக்கு அச்சு அசல் தளபதி போலவே வெறியாட்டம் போட்ட அமுதவாணன்.! 1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை தொடர்ந்து இருந்த அமுதவாணன் 12 லட்சம் ரூபாய் பணத்துடன் சீசன் 6ல் இருந்து வெளியேறினார். இவர் இறுதி வரை இருப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் திடீரென பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வீட்டில் இருந்தபோது அமுதவாணனுக்கும் ஜனனிக்கும் காதல் மலர்ந்ததாக வெளியில் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அது எல்லாம் எதுவும் கிடையாது, ஜனனி தனக்கு தங்கை போன்றவர் என்று சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். வெளியில் வந்த பின்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் அமுதவாணன், சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் லியோ படத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “நான ரெடி தான் வரவா” என்கிற பாடலுக்கு அப்படியே தளபதி போல நடனமாடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அமுதவாணனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்