நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமுதவாணனை பார்த்து நீங்களும் ஜனனியமும் காதலிக்கிறீர்களா என்று நடிகை ஒருவர் கேட்டதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கேள்வியை கேட்ட பின்பு அமுதவாணன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டுள்ள முக்கியமான போட்டியாளர்களாக இருந்தவர்கள் அமுதவாணன் மற்றும் ஜனனி. இவர்கள் இருவருக்கும் வெளியில் எந்த விதமான சந்திப்பும் கிடையாது. பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஆரம்பத்தில் இருவரும் தனித்தனியாக இருந்தபோதிலும், ஒரு கட்டத்தில் இருவரும் நண்பர் நண்பர்களாக நெருங்கி பழகினர். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கைகளாக பழகி வந்த போதிலும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இது அனைத்தும் வதந்திகள், அமுதவாணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இது வெறும் வதந்தி தான் என்று கூறப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த பின்னரும் இந்த சர்ச்சை முடியாத நிலையில், தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன. இதனால் ஒரு கட்டத்தில் சோர்வடைந்த அமுதவாணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாங்கள் இருவரும் உண்மையில் அண்ணன் தங்கைகள் போன்றவர்கள்தான். தேவையில்லாமல் இது போல் வதந்தி பரப்பாதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அமுதவாணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷா மற்றும் KPY பாலா இருவரும் தொகுத்து வழங்க, மதுரை முத்து, தாடி பாலாஜி, குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிஹா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடிக்கும் ரேஷ்மா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு இன்று அமுதவாணன், சிவின், விக்ரமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இப்போது நடிகை ஸ்ருதிஹா அமுதவாணனிடம் நீங்கள் ஜனனியை காதலிக்கிறீர்கள் என்று நான் நினைத்து விட்டேன் என்று கூறினார். இதை கேட்ட அமுதவாணன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் ஜனனி என் தங்கை போன்றவர் என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதை பார்த்த kpy பாலா இது சிரிச்சி வைக்குற ஷோ குடும்பத்தை பிரிச்சு வைக்குற ஷோ இல்ல, நீங்க பாட்டுக்கு குடும்பத்தை பிரிச்சிடாதீங்க என்று ஸ்ருதிகாவுக்கு அட்வைஸ் செய்தார். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல அமுதவாணன் ஜனனியை சுற்றி இது போன்ற செய்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நடிகை ஒருவரே மேடையில் வைத்து இந்த கேள்வியை கேட்டு இருப்பது இன்னும் புயலைக் கிளப்பி இருக்கிறது. Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Vijay Television