பிக்பாஸில் நடந்த கடைசி வெளியேற்றம்.! லட்ச ருபாய் பெட்டியுடன் வெளியேறினார் அமுதவாணன்.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6-ல் தற்போது 11,75,000 ரூபாய் பெட்டியுடன் அமுதவாணன் தற்போது வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 103 நாட்களைக் கடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை உடன் பிக்பாஸ் சீசன் 6 நிறைவடையே இருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய சீசன் 6 தற்போது ஐந்து பேராக சுருங்கி இருக்கிறது. ஷிவின், அமுதவாணன், மைனா, விக்ரமன், அசீம் என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர். இறுதி வாரம் என்பதால் முன்பு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரையும் வீட்டிற்கு உள்ளே அனுமதித்திருந்தனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி மட்டும் உள்ளே வரவில்லை. மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உள்ளே வந்திருந்தனர்.

பிக்பாஸில் நடந்த கடைசி வெளியேற்றம்.! லட்ச ருபாய் பெட்டியுடன் வெளியேறினார் அமுதவாணன்.! 1

 

தற்போது உள்ளே வந்த அவர்களையும் இரண்டு இரண்டு நபர்களாக வெளியேற்றி வருகின்றனர். கடைசியில் பைனலிஸ்டான ஐந்து பேரை மட்டும் வைத்து கிராண்ட் ஃபினாலே நடத்த பிக்பாஸ் குழு திட்டமிட்டு இருக்கிறது. அதற்கு முன்பாக பணமூட்டை வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை வித்தியாசமாக இரண்டு முறை பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பணம் மூட்டை வைக்கப்பட்டு, மூன்று லட்சத்துடன் பேரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேரத்தை விறுவிறுப்பாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதிரவன் உடனடியாக மூன்று லட்ச ரூபாய் எடுத்து அந்த டாஸ்கையே சுவாரஸ்யத்தை குறைத்து விட்டார். எனவே மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக இரண்டாவது முறையாக பணப்பெட்டியை வைத்திருக்கிறது பிக்பாஸ். அனைத்து சீசன்களிலும் பணப்பெட்டி டாஸ்க் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பும் போட்டியாளர்கள் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படும் வரை காத்திருந்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

 

சீசன் மூன்றுல் கவினும் சீசன் நாளில் கேபியும், சீசன் ஐந்தில் சிபியும் பணப் பெட்டியை எடுத்தனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட்டில் ஸ்ருதிக்கும் ஜூலிக்கும் போட்டி இருந்ததால் பல டாஸ்க்களை வைத்து இறுதியில் ஸ்ருதி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இந்த நிலையில் இந்த சீசனிலும் கதிரவன் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியதால் மீண்டும் பணப்பெட்டி டாஸ்க்கை வைத்திருக்கின்றனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே கதிரவன் குறைந்தபட்ச பணத்துடன் வெளியேறிய முதல் போட்டியாளராக இருந்த காரணத்தினால், மீண்டும் பேரத்தை அதிகப்படுத்தி தற்போது 11,75,000 ரூபாயுடன் அமுதவாணன் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். இதற்கு முன் நடந்த சீசன் 5ல் சிபி 12 லட்சத்துடன் வெளியேறியது அதிகபட்ச பணமாக இருந்த நிலையில் தற்போது அமுதவாணன் 11,75,000 ரூபாயை எடுத்துச் சென்று இருக்கிறார். அமுதவாணன் வெளியேறியதால் தற்போது பைனலிஸ்ட் ஆக விக்ரமன், அசீம், மைனா, ஷிவின் ஆகிய நான்கு பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே பெருமளவில் எழுந்திருக்கிறது..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்