விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் திவ்ய தர்ஷினி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி ஆரம்பத்தில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இருக்கும் பல தொகுப்பாளர்களுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார் திவ்ய தர்ஷினி. பல இசைவெளியீட்டு விழா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலக்கியிருக்காரு திவ்ய தர்ஷினி.

சமீபகாலமாக இவர் கால்களில் பாதிப்பு இருப்பதால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு நடக்கமுடியாமல் வீல் சேரிலும் வந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத திவ்ய தர்ஷினி தற்போது மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படம் வெளியிட்டு உள்ளார். மேலும் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கால் சரி ஆகி இருப்பதாகவும் கூறி உள்ளார்.
தற்போது இவர் செம்ம கியூட்டாக வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் DD அழகை வர்ணித்து கருத்துக்களை வீடியோவுக்கு பதிவிட்டு வருகின்றனர்.