லாபம் ஈட்டிய ஆந்திரா வங்கி

இந்திய பொதுத் துறை நிறுவனத்தை சோ்ந்த ஆந்திரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.174.76 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

லாபம் ஈட்டிய ஆந்திரா வங்கி 1
ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கியின் வருவாய் நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.5,913.14 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,609.43 கோடியுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளது.

அதே போல், கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.573.52 கோடி நிகர இழப்பினை சந்தித்து இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வங்கி ரூ.174.76 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியது.

கடந்தாண்டு டிசம்பா் இறுதி வரையிலுமாக வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 17.26 சதவீதமாக அதிகரித்தது. இது, கடந்த 2018 டிசம்பரில் 16.68 சதவீதமாக காணப்பட்டது. அதேசமயம், நிகர அளவிலான வாராக் கடன் 6.99 சதவீதத்திலிருந்து 6.36 சதவீதமாக குறைந்தது.

ஆந்திரா வங்கி மற்றும் காா்ப்பரேஷன் வங்கிகளை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன்இணைப்பதற்கு வங்கியின் இயக்குநா் குழு கடந்தாண்டு செப்டம்பரில் கொள்கை ரீதியிலான ஒப்புதலை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

×

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்