Categories: சினிமா

ஆண்ட்ரியாவுக்கு வந்த போன் மிரட்டல்! இந்த நடிகரா?

வெளியிட்டது
ஆண்ட்ரியாவுக்கு வந்த போன் மிரட்டல்! இந்த நடிகரா? 1

நடிகை ஆண்ட்ரியா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தனக்கும், திருமணமான நடிகர் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது எனவும், அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்திருந்தார். அந்த நடிகர் யார் என்று ஆண்ட்ரியா கூறாவிட்டாலும் பலரும் ஒருவரை தான் கையை காட்டுகிறார்கள். ஆண்ட்ரியா விவகாரம் குறித்து அறிந்த கோலிவுட்காரர்களும் அவருடன் தொடர்பு வைத்திருந்தவர் நிச்சயம் அவர் தான் என்று ஒரு நடிகரின் பெயரை கூறுகிறார்கள்.

அந்த திருமணமான நடிகருக்கும், தனக்கும் இடையேயான தொடர்பு, பேச்சுகள் இவையனைத்தும் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது என ஆண்ட்ரியா தெரிவித்தார். புத்தக வெளியீட்டு தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை வெளியிடக் கூடாது என்று கூறி ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறது.

புத்தகத்தை வெளியிட கூடாது என்று போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த திருமணமான நடிகர் தான் ஆண்ட்ரியாவை மிரட்டுவதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரியாவின் பெயரை சொல்லாமலேயே அந்த நடிகரை பற்றித் தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புத்தகம் வந்துவிட்டால் நடிகரின் மானம் கப்பல் ஏறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நடிகரின் பேக்கிரவுண்டு தெரிந்தும் தைரியமாக புத்தகம் எழுதியுள்ள ஆண்ட்ரியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் பாராட்டியுள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்