Categories: சினிமா

காட்டில் கொடூர நாய்களிடம் தனியாக மாட்டிக்கொள்ளும் ஆண்ட்ரியா.! நோ என்ட்ரி படத்தின் ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கும் “நோ எண்ட்ரி” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. நாய்களை வைத்து கிருமிகளை பரப்பும் வித்தியாசமான கதை அம்சத்துடன் கூடிய படம் இந்த படம் உருவாகி இருக்கிறது. சென்னையில் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் நடிகையாகவும் அவதாரம் எடுத்தார். 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. பின்னர் இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்கு பின்னர் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காட்டில் கொடூர நாய்களிடம் தனியாக மாட்டிக்கொள்ளும் ஆண்ட்ரியா.! நோ என்ட்ரி படத்தின் ட்ரைலர் இதோ.! 1

பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திலும், கமலஹாசன் உடன் விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார் ஆண்ட்ரியா. பின்னர் அரண்மனை படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் அசத்தியிருந்தார். அதற்கு பின்னர் துப்பறிவாளன், தரமணி, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் பின்னணி பாடகியாக பல படங்களில் பாடியிருக்கிறார். பின்னணி குரல் கொடுப்பவர் ஆக வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. பிசாசு 2, கா, மாளிகை, நோ என்ட்ரி ஆகிய நான்கு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அனைத்து படங்களும் தயாராகி வெளியிடும் நிலையில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மேலும் இரு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் ஆண்ட்ரியா.


தற்போது இவர் நடித்துள்ள நோ என்ட்ரி படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து சமீபத்தில் மறைந்த பிரதாப் போத்தன், ஆதவ் கண்ணதாசன், ரம்யா ராவ், மானஸ், ஜெயஸ்ரீ, ஜான்வி போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை அழகு கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார். அஜீஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீதர் அருணாச்சலம் என்பவர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போதைய காலத்தில் வைரஸ்களை பரப்புவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் கூட அப்படி பரப்பப்பட்டது தான் என்கிற கருத்து இருக்கிறது. நாய்களைக் கொண்டு வைரஸ்கள் எப்படி பரப்பப்படுகிறது என்கிற வித்தியாசமான கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ட்ரெய்லர் வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்