Categories: சினிமா

லியோ படத்தின் டீசருக்காக வெறித்தனமாக கம்போஸ் செய்யும் அனிருத்.! இணையத்தில் கசிந்த வீடியோ.!

வெளியிட்டது

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இந்த படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. வாரிசு படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லியோ என்கிற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதற்காக படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது. படக்குழு மூன்று நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றுள்ளது. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் வெளியானபோது டைட்டிலை ஒரு சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். அதேபோல இந்த படத்திற்கும் டைட்டில் டீசருடன் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதேபோல பிப்ரவரி 3ஆம் தேதி குட்டி டீசர் ஒன்றை வெளியிட்டு படத்தின் பெயர் லியோ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த டீசரை பார்க்கும்பொழுது படம் ஆக்ஷன் பிளாக் படமாக இருக்கும் என்று தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் டீசருக்காக வெறித்தனமாக கம்போஸ் செய்யும் அனிருத்.! இணையத்தில் கசிந்த வீடியோ.! 1
சாக்லேட் ஃபேக்டரி ஒன்றில் சாக்லேட்டையும் கத்தியையும் ஒருசேர செய்து கொண்டிருக்கிறார் விஜய். அப்போது அவரை தேடி அங்கு வில்லன் கும்பல் ஒன்று வருகிறது. பின்னர் கத்தியை எடுத்த அவர் சாக்லேட் குழம்பில் முக்கி எடுத்து அதை சுவைத்து விட்டு பிளடி ஸ்வீட் என்று கூறுகிறார். இந்த அதிரடி காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.அந்த டைட்டில் அறிவிக்கும் டீசர் வீடியோவை மட்டும் இதுவரை 38 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்த நிலையில் பின்னணியில் ஒலிக்கும் அந்த பாடலை அனிருத் மற்றும் சித்தார்த் இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடலை ஹெய்சன் பர்க் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது இந்தப் பாடலுக்கு அனிருத் கம்போஸ் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு கிடார் கலைஞராக பணிபுரிந்தவர் தனது instagram பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

வீடியோவை பகிர்ந்த கிடார் கலைஞர் லியோ படத்திற்காக அனிருத் அற்புதமாக கம்போஸ் செய்யும் காட்சியை பாருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. டைட்டில் டீசருக்கே அனிருத் மிரட்டி இருக்கிறார், படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள் வேற லெவலில் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்