“ஏங்க படத்துல அவ்ளோ விஷயம் இருக்கு இதயே ஏன் எல்லாரும் கேட்குறீங்க”!! “அந்த” பி.ஜி.எம் குறித்து நக்கலாக பதிலளித்த அனிருத்!!

வெளியிட்டது

ஜூன் 3ஆம் தேதி வெளியான “விக்ரம்” படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன், சூரியா என நடச்சத்திர பட்டாளத்தை கொண்டு உருவாகிய இந்த படம் வெளியான இரண்டே வாரங்களில் 300 கோடிக்கு வசூல் ஈட்டி, இந்த ஆண்டின் அதிக வசூல் எடுத்த தமிழ் படமாக உருவெடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஏங்க படத்துல அவ்ளோ விஷயம் இருக்கு இதயே ஏன் எல்லாரும் கேட்குறீங்க"!! "அந்த" பி.ஜி.எம் குறித்து நக்கலாக பதிலளித்த அனிருத்!! 1

இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஒரு மிக பெரிய நட்சத்திர பட்டாளத்தை சரியாக கையாண்டு அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒரு படத்தை கொடுத்ததற்கு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகளும் பலரும் வழங்க முன்வந்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய தூண் இசையமைப்பாளர் அனிருத்தின் மிரட்டலான இசையே.

தமிழிலுள்ள முன்னணி நாயகர்களுக்கு பலருக்கும் நல்ல இசையை கொடுத்த அனிருத் கமலுடன் மட்டும் பணியாற்றாமல் இருந்தார். அதை இந்த படம் நிவர்த்தி செய்ய, பாடல்கள் பின்னணி இசை என அனைத்திலுமே மிரட்டிஎடுத்துள்ளார். படத்தில் பல்வேறு பின்னணி இசையும் பாராட்டை பெற்ற போதிலும் ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தது அந்த “மோனிங் பி.ஜி.எம்” தான்.

படத்தின் பின்னணியில் சேர்ந்து வரும் இது மட்டும் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது குறித்து நிறைய கேள்விகளும் எப்படி எடுத்தீர்கள் என பலரும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க, அண்மையில் கேரளாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் அனிருத் இடமே செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார்.

“இந்த ஐடியா எங்க இருந்து வந்தது, எப்படி இப்படி ஒரு பின்னணி இசை கொடுக்க முடிவு செய்தீர்கள்” என அவர் கேட்க, சிரித்து கொண்டே “படத்துல அவ்ளோ மியூசிக் இருக்கு இத மட்டும் என் தனியா கேட்டுக்குறீங்க?” என கொஞ்ச நக்கல் அடித்து விட்டு, “இந்த மாரி ஒரு விஷயம் ஸ்கிரிப்ட்லயே இருந்துச்சு, நான் நார்மலா ஒரு ட்யூன் போனேன், அப்பறோம் லோகேஷ் மிக்ஸிங்’ல இன்புட் கொடுக்க நான் அத அப்படியே செஞ்சி முடிச்சிட்டேன்,  அவ்ளோதான்..ஆனா ரொம்ப தேங்க்ஸ் இத பத்தி கேட்டதுக்கு” ஏன் கூறி பதிலளித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இயக்குனர் லோகேஷ் அடுத்தடுத்து தான் எடுக்க போகும் படங்களை குறித்தும் பேசியிருந்தார். அடுத்ததாக தான் எடுக்க இருக்கும் நடிகர் விஜயின் படம் முழுக்க முழுக்க ஒரு கெங்ஸ்டர் படமாகவும், அது தான் முன்னரே ரஜினிக்காக யோசித்த ஒரு கதை, சற்று மாற்றி விஜய்க்காக இப்பொது எழுதி முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பொது ட்ரெண்ட் ஆகிவரும் “LCU”குறித்தும் பேசிய லோகேஷ், தன்னுடைய 4 படங்களில் மாநகரம், மாஸ்டர் இரண்டுமே தனி தனி கதைகள் என்றும், மற்றபடி அடுத்து வரவிற்கும் படங்கள் கைதி, விக்ரம் படங்களுடன் தொடர்புடைய படங்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Video Courtesy – FridayDreamsEntertainment.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்