லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச்..உங்களுக்கு என்ன கொடுத்தார்..? கேள்விக்கு நச் என பதில் அளித்து thug life செய்த அனிருத்

வெளியிட்டது

லோகேஷுக்கு கமல் கார் கொடுத்தார், சூர்யாவுக்கு வாட்ச் கொடுத்தார், உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று நிரூபர் கேட்ட கேள்விக்கு நச் என்று பதில் அளித்துள்ளார் அனிருத். தமிழ் திரையுலகில் முண்ணனி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். மிக சிறு வயதிலேயே திரைத்துறையில் வந்துவிட்டதால் தற்போது இருக்கும் இசையமைப்பாளர்களிலே இளம் இசையமைப்பாளராக இருக்கிறார். அதனால்தான் என்னவோ பெரும் இளைஞர் பட்டாளத்தையே கவர்ந்துள்ளார். இசையமைப்பதை தாண்டி இவர் பாடகராகவும் உள்ளார். இவர் பாடும் பாடலில் ஜீவன் உள்ளதாக இவரது ரசிகர்கள் இவரை கொண்டாடுவது உண்டு. இவர் மீது சில குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதுண்டு. இவர் எப்போதும் பிற மொழி பாடல்களை காப்பியடித்து இசையமைக்கிறார். சொந்தமாக இசையமைத்து இல்லை என்று. கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ளது.

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச்..உங்களுக்கு என்ன கொடுத்தார்..? கேள்விக்கு நச் என பதில் அளித்து thug life செய்த அனிருத் 1

ஆனால் எது எப்படியோ தனது பாடல்களால் பலரின் உள்ளங்களை கவர்ந்து இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. அடுத்து வெளியாக உள்ள பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் அனிருத். சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் விக்ரம் படத்திற்கும் இசை அமைத்து இருந்தார். 3 பாடல்கள் மட்டுமே இருந்த போதிலும் BGM, Sound Track என அசத்தியிருந்தார் அனிருத். படத்தின் இத்தகைய வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் தமிழுக்கு அடுத்தபடியாக கேரளாவில் மட்டும் 30 கோடி வசூலை கடந்து விக்ரம் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் 80 லட்சம் மதிப்புள்ள காரை லோகேஷுக்கு பரிசாக அளித்தார். படத்தில் பணி புரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி உயர் ரக பைக்குகளை பரிசளித்தார்.மேலும் 46லட்சம் மதிப்புள்ள வாட்சை சூர்யாவுக்கு அளித்தார். இதனால் படத்தை தனது இசையால் மெருகூட்டிய அனிருத்துக்கு ஏதாவது பரிசளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கமல் எந்த பரிசும் அனிருத்துக்கு வழங்கவில்லை. இதனால் அனிருத் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்

இந்த நிலையில் கேரளா ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக லோகேஷ் மற்றும் அனிருத் அங்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் பத்திரிக்கையாளர்களஐ சந்தித்தனர். அப்போது அனிருத்திடம் லோகேஷுக்கு கமல் காரை பரிசளித்தார். சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். ஆனால் உங்களுக்கு என்ன பரிசளித்தார் என்று நிரூபர்கள் கேள்வி எழுப்ப, அனிருத்துக்கு கமல் சார் விக்ரம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கொடுத்தார் என்று அனிருத் ஜாலியாக சொன்னார். அவரின் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்