சொந்த வீடு கட்டி கெத்து காட்டிய அனிதா..நேரில் வந்து வாழ்த்திய ரம்யா பாண்டியன் | Anitha Sampath

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். நல்ல குரல் வளமும், தமிழ் உச்சரிப்பும் இவரை பிரபலமாக்கியது. திடீரென ஒரு நாள் அனிதா சம்பத்தின் புகைப்படம் காரணம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பரவியது. நெட்டிசன்கள் அவரின் செய்தி வாசிப்பை பார்த்து ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ள, அன்றிலிருந்து மிகவும் பிரபலமானார் அனிதா. இவரின் நேர்த்தியான புடவை அணியும் முறை மற்றும் இவர் அணிந்து வரும் நகைகள் மீது பெண்களுக்கு ஒரு கண் இருக்கவே செய்தது. இந்த திடீர் பிரபலத்தால் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

சொந்த வீடு கட்டி கெத்து காட்டிய அனிதா..நேரில் வந்து வாழ்த்திய ரம்யா பாண்டியன் | Anitha Sampath 1

பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். விளையாட்டைப் பற்றியும், சக போட்டியாளர்கள் பற்றியும் சரியான புரிதல் இல்லாமலும், எதற்கெடுத்தாலும் சண்டை சண்டை என இருந்த காரணத்தினால் செம்ம கடுப்பான மக்கள் இவரை வெளியேற்றினர். அதீதமான சிந்தனை, மற்ற போட்டியாளர்களை பற்றிய விமர்சனம், யாராவது எதாவது சொன்னால் உடனே அழுகை, சண்டை என பார்ப்பவர்களுக்கு தலைவலியாக இருந்தார். இதனால் பாதிலேயே மக்கள் இவரை வெளியேற்றிவிட்டனர். வெளியேறிய பின்னர் இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சன்டிவியில் சில நாடகங்களிலும் நடித்து வருகிறார். Video Code Embed Credits: Little Talks

இவரின் இது போன்ற செயல்பாடுகளால் இவருக்கு ஹேட்டர்ஸும் நெகடிவ் கமெண்ட்ஸ்ம் அதிகம். ஆனால் பிக்பாஸில் கலந்து கொண்ட போது தான் வீடு இல்லாமல் காசு இல்லாமல் பல கி.மீ தூரம் பிய்ந்த செருப்புடன் சென்று டியூசன் எடுப்பேன் என்றும் ஒரு நாள் இந்த நிலைமை மாறும் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே தற்போது அவர் கணவருடன் இணைந்து புதிதாக வீடு கட்டியுள்ளார் அனிதா சம்பத். புது வீட்டிற்கு ரம்யா பாண்டியன் உட்பட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தியுள்ளனர். அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்