விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்..! Shooting Spot வீடியோவை வெளியிட்டு அறிவித்த அனிதா.!

வெளியிட்டது

பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது விஜய் டிவியில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். அவருடைய உடைக்காகவும், மேட்ச் அண்ட் மேட்ச் நகைகளுக்காகவோமே இவரை பின் தொடர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர். ஒரே இரவில் வைரலான நபராக மாறி போயிருந்தார் அனிதா சம்பத். பலரும் அனிதா சம்பத்தின் புகைப்படங்களை பகிரத் தொடங்கினர். யார் என்றே தெரியாமல் இருந்த அனிதா சம்பத் ஒரே நாளில் பிரபலமாக மாறிப் போனார். இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தார் அனிதா சம்பத். இதனால் அனிதாவை குறைந்த வாக்குகள் அளித்து மக்கள் பாதியிலேயே வெளியேற்றினர்.

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்..! Shooting Spot வீடியோவை வெளியிட்டு அறிவித்த அனிதா.! 1

தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்கிற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ஓடிடி தளத்தில் வெளியான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக பிறர் ஒன்று சொன்னால் அதை தவறாக புரிந்து கொண்டு அனிதா சம்பத் ஏதாவது பிரச்சனை செய்து கொண்டே இருந்தார். இது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவரை குறைந்த வாக்குகள் எடுத்து மீண்டும் பாதியிலேயே வெளியேற்றி இருந்தனர். வெளியே வந்த பின்னர் சில படங்களிலும் நடித்திருக்கிறார் அனிதா. மேலும் சிறு வயதில் தான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன், தனக்கு பெரிய கனவாக இருப்பது வீடு தான் என்றும், அதனால் புது வீடு கட்ட போவதாக அறிவித்து புது வீட்டையும் கட்டி முடித்திருந்தார். தனது கணவருடன் சேர்ந்து அவர் அந்த வீட்டை கட்டி கிரகப்பிரவேசம் செய்து அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். பலரும் அனிதா சம்பத்திற்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

இந்த நிலையில் சமீபமாக அனிதா சம்பத்திற்கு பெரிய அளவில் எந்த பட வாய்ப்புகளோ நிகழ்ச்சிகளோ கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவரே தற்போது அறிவித்திருக்கிறார். அவர் சீரியலில் எதுவும் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா அல்லது விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்த தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாரா.?என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் தான் விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தனக்கு வாழ்த்துக்களை கூறும்படியும் அனிதா சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருக்கிறார். எது எப்படியாக இருந்தாலும் அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரைக்கு வர இருப்பது குறித்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அனிதாவிற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்