‘அண்ணா’ சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அண்ணா’ சீரியலில் நடித்து வந்த நடிகை தற்போது அந்த சீரியலை விட்டு விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார். கடந்த மே மாதம் 2023ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் சீரியலில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் ‘அண்ணா’ சீரியல். இந்த சீரியலில் ஆர்.ஜே செந்தில் மற்றும் நித்யா ராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

'அண்ணா' சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 1

மேலும் இவர்களுடன் சுனிதா, ப்ரீத்தா சுரேஷ், ஹேமா சின்ராஜ், ரேமா அசோக், பூவிலங்கு மோகன், வி.ஜே தாரா ஆகியோர் நடித்து வந்தனர். இதில் வி.ஜே தாரா சில நாட்களுக்கு முன்பு ‘சந்தியாராகம்’ தொடரில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதால் ‘அண்ணா’ சீரியலை விட்டு விலகி இருந்தார். அவருக்குப் பதிலாக தர்ஷு சுந்தரம் அந்த இடத்தை நிரப்பியிருந்தார்.

 

வீரா என்கிற கதாபாத்திரத்தில் நான்கு சகோதரிகளில் ஒருவராக நடித்து வந்த அவர், தற்போது இந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், இந்த சமயத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையால் சீரியலை விட்டு விலகி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்