Categories: சினிமா

அம்மாவை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற அந்தோணி தாசன்.! அழகிய வீடியோ.!

வெளியிட்டது

நடுத்தர குடும்பத்தில் பிறந்த பலருக்கும் விமானத்தில் செல்வது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். அதுபோல ஒரு கனவை நிறைவேற்றி இருக்கிறார் அந்தோணி தாசன். தனது தாயை விமானத்தில் அழைத்து சென்றிருக்கும் அவர், அம்மாவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி விட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான அந்தோணி தாசன், நாட்டுப்புற பாடகராக தமிழ் திரையுலகில் வலம் வந்தார். ஆரம்பத்தில் தெருக்கூத்து மேடை கச்சேரிகளில் பங்கெடுத்து வந்த அவர் சென்னையில் நடந்த மக்கள் இசை என்கிற நிகழ்ச்சியில் பாடினார். அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கச்சேரிகள் மேடைகளில் பாடி வந்த அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டுப்புற ஸ்டைலில் அசால்டாக பாடும் அவர் தமிழ் திரையுலகில் பல நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். திமுகவின் பிரச்சாரங்களில் ஸ்டாலின் தான் வராரு என்கிற பாடலை கூட அந்தோணி தாசன் தான் பாடியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மாவை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற அந்தோணி தாசன்.! அழகிய வீடியோ.! 1

இவர் 2013ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்கிற படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் காசு பணம் துட்டு மணி மணி என்கிற பாடலை பாடினார் .அதன் பின்னர் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டி நாட்டு கொடியின் மேல, யார் என்ன சொன்னாலும் போன்ற பல பாடல்களை பாடி இருக்கிறார். இதில் யார் என்ன சொன்னாலும் என்கிற பாடல் குடும்பத்தின் அருமை விளக்கி இருப்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இது தவிர அவர் அந்தோணியின் பார்ட்டி என்கிற இசை குழு ஒன்றையும் நடத்தி வருகிறார். தமிழ் திரையுலகின் நம்பிக்கை என்கிற விருதும் நாட்டுப்புறக் கலையின் அடையாளம் என்கிற பாராட்டும் அந்தோணி தாசனுக்கு வழங்கப்பட்டது. தென்னிந்திய பண்பாட்டு விழா என்கிற சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. கனீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து திறமையை காட்டி இருந்தார். ஆனால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.


தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இருக்கும் அந்தோணி தாசன் தற்போது தனது தாயின் நீண்ட நாள் ஆசையான விமானத்தில் பயணிக்கும் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். தனது தாயை விமானத்தில் அழைத்துச் சென்ற புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் பூமியிலிருந்து வானத்தைக் காட்டிய என்னுடைய தாய்க்கு வானத்திலிருந்து பூமியை காட்டிவிட்டேன் என்று பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவிற்கு தற்போது ரசிகர்கள் பலரும் லைக்குகளை போட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்