சினிமாவில் நடிக்க வரும் நாயகிகள் மட்டுமின்றி பெருமபாலான பெண் கதாபத்திரங்களில் நடித்து வரும் பெண்கள் பலரும் தங்களுடைய மீடியா வாழ்வில் சந்தித்திட்ட ஒரு சம்பவம் என்றால் அது #MeToo பிரச்சனையையே சார்ந்து இருக்கும். இது குறித்து பல நடிகைகளும் ஓப்பனாகவே பேசிய நிலையில், இப்பொது மற்றொரு இளம் நடிகை இது குறித்து மனம் திறந்துள்ளார்.

மலையாள சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை அபர்ணா பாலமுரளி. ஆனால் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில், ஃபகத் ஃபாசில் நடித்த “மஹேஷிண்டே பிரதிகாரம்” படம் தான் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. நடிப்பது மட்டுமின்றி பாடகியாகவும் சில மலையாள படங்களில் பாடியுள்ளார்.
இவர் தமிழிலும் “8 தோட்டாக்கள்” மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் “சர்வம் தாளமயம்” போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இவரை நடிகர் சூரியாவின் “சூரரை போற்று” படத்தின் மூலம் சுதா கொங்கரா மிகவும் பிரபலமடைய செய்தார். படத்தில் பொம்மியாக கணவனுக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். ஒரே படத்தில் இவர் தமிழகம் எங்கும் பிரபலமடைந்தார்.
ஏற்கனவே இவர் தமிழில் ஜீ5 வெப் தொடரான “Fingertip” என்ற தொடரிலும் நடித்து உள்ளார். இப்போது அடுத்தடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் “வீட்ல விஷேசங்க” படம் மற்றும் “Fingertip” தொடரின் இரண்டாம் பாகம், “நித்தம் ஒரு வானம்” என்கிற படத்தில் அஷோக் செல்வனுடனும், கார்த்தியுடன் பெயரிடப்படாத படத்திலும் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான “வீட்ல விஷேசங்க” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளும் நடைபெற்று வருகிறது. ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் “புது புது அர்த்தங்கள்” தொடரில் கலந்த கொண்டு அபர்ணாவும், பாலாஜியும் படத்தை ப்ரோமொடே செய்தார்கள்.
இப்பொது ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக இவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் சந்தித்த #MeToo சம்பவம் குறித்து பேசியுள்ளார். தான் சினிமாவிற்கு வந்த புதிதில் மாடலிங் செய்து கொண்டிருந்த பொது, அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் தன்னை தவறாக புகைப்படம் எடுத்து வைத்து சிலர் மிரட்டியதாகவும், அதனை கடந்து வர தான் மிகவும் கஷ்டபட்டதாகவும், ஆனால் சினிமாவில் தான் அது போன்ற கசப்பான சம்பவங்கள் எதுவும் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.