இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசை நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா என்ற மணிரத்னம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் இன்று பல இசை கலைஞர்கள் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் ஆஸ்கர் நாயகனாக வளம் வருகிறார். இவர் தற்போது அயலான் , பொன்னியின் செல்வன் , வெந்து தணிந்தது காடு மேலும் சில ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து

வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்போதுள்ள சில இசையமைப்பாளர்கள் இசையமைப்பதையும் தாண்டி ஹீரோவாகவும் ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் முதலில் வந்தது ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளராக வளம் வந்த இவர் திடீரென டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதே போல் விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது நடிக்க வருவீர்கள் என்று கேட்டதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கிண்டலான பதிலை கொடுத்துள்ளார். நான் நிம்மதியா இருக்குறது உங்களுக்கு புடிக்காதுல என்று கிண்டலடித்துள்ளார்.