திருச்சியில் சூப்பர் வீடு கட்டி வரும் அறந்தாங்கி நிஷா.! வீடை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் பெண் காமெடிகளில் ஒருவராக கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா தற்போது திருச்சியில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டை சுற்றி காண்பித்து தற்போது வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். விஜய் டிவி பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரு இடமாக இருந்து வருகிறது. குறிப்பாக காமெடி கலைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக இன்று முன்னணி நட்சத்திரங்களாக கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானம் மற்றும் யோகி பாபு இருவருமே விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்கள் தான். இதில் யோகி பாபு லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக இருந்தார். அதே நிகழ்ச்சியில் சந்தானம் காமெடியனாக இருந்தார். இன்று இவர்கள் இருவருமே தமிழின் முன்னணி கதாநாயகர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் சூப்பர் வீடு கட்டி வரும் அறந்தாங்கி நிஷா.! வீடை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ.! 1

அதேபோல சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்தான். அவர் பல நடன நிகழ்ச்சிகள் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறார். மேலும் அது இது எது என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி இருக்கிறார். பின்னர் இவருக்கு அங்கிருந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுபோல தற்போது விஜய் டிவியில் பெண் காமெடியர்களில் ஒருவர்தான் அறந்தாங்கி நிஷா. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்காக தேடி வந்தார். ஆரம்பத்தில் பட்டிமன்றங்களில் பேசிக் கொண்டிருந்த இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறை ஆனாலும் சரி சின்னத்திரை காமெடிகளும் சரி, பெண் காமெடி நடிகைகள் மிகக் குறைவு. அந்த வரிசையில் பெண் காமெடி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அறந்தாங்கி நிஷா. இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா தற்போது தனது சொந்த சம்பாத்தியத்தில் திருச்சியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார்.


Youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் அறந்தாங்கி நிஷா அந்த சேனலில் தற்போது வீடு கட்டும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது சொந்த சம்பாத்தியத்தில் சிறுக சிறுக காசு சேமித்து இந்த வீட்டை கட்டி வருவதாகவும் விரைவில் பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் அந்த முழு வீடியோ வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Karuppu Roja

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்